வீடு கட்டுவதற்கு பணம் இல்லாத வேதனையில், மருந்து கம்பெனி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

புதிய வீடு கட்டுவதற்கு பணம் இல்லாத வேதனையில் மருந்து கம்பெனி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-09-13 22:15 GMT
விழுப்புரம், 

கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராஜேஷ்குமார் (வயது 31). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலித்திராம்பட்டு கிராமத்தில் சொந்தமாக 4 சென்ட் வீட்டுமனை உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த வாரம் பூமி பூஜை போட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீடு கட்டுவதற்காக இவர் தனது தந்தையிடம் சென்று பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் புதிய வீடு கட்டுவதற்கு பணம் இல்லையே என்ற மனவேதனையுடன் இருந்த ராஜேஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்