இடமாற்ற முடிவுக்கு எதிர்ப்பு: சண்டே மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
இடமாற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி காந்தி வீதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சண்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை அங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இங்கு வியாபாரம் செய்பவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிலர் தமிழக வியாபாரிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த இடத்தை உள்வாடகைக்கு விட்டு விடுகின்ற னர். இதனால் அங்கு கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே சண்டே மார்க்கெட் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதனால் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் சண்டே மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை கடைகளை அடைத்து காந்திவீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்திற்கு சங்க தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயல் தலைவர் ரவி, செயலாளர் துரை செல்வம், பொருளாளர் தயாளன் மற்றும் நிர்வாகிகள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சட்டசபைக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு, மதியம் 12 மணிக்கு மேல் கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கினர்.