தியாகராஜர் கோவில் கோபுரத்தில் இருந்து கற்சிலை உடைந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

தியாகராஜர் கோவில் கோபுரத்தில் இருந்து கற்சிலை உடைந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update:2019-09-09 03:45 IST
திருவாரூர்,

திருவாரூர் அருகே நாங்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பட்டு (வயது 70). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீட்டை வெளியேறி கோவிலில் பிச்சை எடுத்து கொண்டு கிடைக்கும் இடங்களில் தூங்கி கொண்டி இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே படுத்து தூங்கி உள்ளார். அப்போது கோபுரத்தில் இருந்து ஒரு கற்சிலையின் பாகம் உடைந்து பட்டு மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்