நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்ற ஆட்டோ டிரைவர் - போலீசில் சரண் அடைந்தார்
நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு போகிர்பாடாவை சேர்ந்தவர் கிஷோர் (வயது62). இவரது மனைவி சுபா (48). இந்த தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் தானேயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆட்டோ டிரைவராக இருந்து வரும் கிஷோர் நேற்று காலை சவாரிக்காக வெளியே சென்று விட்டு மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கிஷோர் தன்னை பார்த்ததை கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த கிஷோர் தனது மனைவியிடம் விசாரித்தார். இதற்கு சரியாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் கடும் ஆத்திரம் கொண்டார்.
உடனே சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து சுபாவின் கழுத்தில் சராமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சுபா அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து கிஷோர் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். நேராக விரார் போலீசில் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு சென்று படுகாயத்துடன் கிடந்த சுபாவை மீட்டனர். ஆனால் போலீசார் வரும் முன்பே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்து அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
நடத்தையில் சந்தேகம் காரணமாக கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.