இன்று மின்சார ரெயில்கள் வழக்கம் போல ஓடும்; ரெயில்வே அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி காரணமாக பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மின்சார ரெயில்கள் வழக்கம் போல ஓடும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2019-09-07 23:00 GMT
மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கடந்த 2-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள பிரமாண்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற லால்பாக் விநாயகர் சிலையை தரிசிப்பதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில், மண்டல்களுக்கு சென்று விநாயகர் சிலையை தரிசனம் செய்வதில் பக்தர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறநகர் வழித்தடத்தில் வாராந்திர பராமரிப்பு பணியை ரத்து செய்து உள்ளன. இதன் காரணமாக மெயின், துறைமுகம் மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய மூன்று வழித்தடங்களிலும் வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, அதிகாலையில் பக்தர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய, மேற்கு ரெயில்வேக்கள் அறிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்