மாநகராட்சி, நகராட்சிகளில் வசிப்பவர்கள் அனைவருக்கும்: வீடு திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
மாநகராட்சி, நகராட்சிகளில் வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், பொதுமக்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பித்து வீடு கட்டலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்களுக்கு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. மேலும் வீடு கட்டுவதற்கான நிலத்தை பதிவு செய்து பத்திரம் மற்றும் பட்டா வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் பயனாளியின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் வீட்டின் பரப்பளவு 300 சதுர அடியில் இருந்து 500 சதுர அடி வரை இருக்க வேண்டும். மேலும் வீட்டில் படுக்கை அறை, சமையல் அறை, குளியலறை அவசியம் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டுவதற்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை 4 தவணைகளாக சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் கான்கிரீட் வீடு இல்லாத நபர்கள், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்கு அந்தந்த பகுதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.