தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.;

Update: 2019-09-07 21:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியின் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், காட்டு ராஜா, அன்பழகன், ரசூல்அகமது, கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணியின் மாநில துணை செயலாளரும், 6-வது மண்டல இளைஞரணியின் பொறுப்பாளருமான துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணிக்கு புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கட்சியின் இளைஞரணிக்கு சட்டமன்ற தொகுதிக்கு புதிதாக 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. மறைந்த தமிழக முதல்- அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தி.மு.க. இளைஞரணி சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். வருகிற 15-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவு இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க. ஒன்றிய, பேரூராட்சி, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்