பாய்ஸ் கம்பெனி-உபதலை சாலையை சீரமைக்க தடையில்லா சான்று வழங்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
குன்னூரில் உபதலை-பாய்ஸ் கம்பெனி இடையே பழுதான சாலையை சீரமைக்க கன்டோன்மெண்ட் நிர்வாகத்துக்கு தடையில்லா சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குன்னூர்,
குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாய்ஸ் கம்பெனியில் இருந்து உபதலைக்கு கேட்டில் பவுண்டு, அருவங்காடு ரெயில் நிலையம், கக்கன் நகர்வழியாக சாலை செல்கிறது. இந்த சாலை குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குன்னூரில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் இருந்து ராணுவ வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குன்னூருக்கு ஆய்வு செய்ய வந்தார். அப்போது கன்டோன்மெண்ட் போர்டு துணை தலைவர் பாரதியார் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து பாய்ஸ் கம்பெனி-உபதலை செல்லும் சாலையை சீரமைக்க கன்டோன்மெண்ட் நிர்வாகத்திற்கு தடையில்லா சான்று வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இந்த சாலையை சீரமைக்க தடையில்லா சான்றை வழங்க குன்னூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து துணைத் தலைவர் பாரதியார் கூறும்போது, பாய்ஸ் கம்பெனி-உபதலை சாலையை சீரமைக்க தடையில்லா சான்று கிடைத்தவுடன் வருகிற போர்டு கூட்டத்தில் வைத்து பணி தொடங்கப்படும் என்று கூறினார்.