அரும்பராம்பட்டு ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணியை கலெக்டர் ஆய்வு
அரும்பராம்பட்டு ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் தாலுகா ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் அரும்பராம்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. 95 ஏக்கர்பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியை தூர்வாரி, பழுதடைந்த மதகுகளை சீரமைக்கவேண்டும் என்று ஏரி பாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஏரியை சீரமைக்க முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது. இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க் காலை தூர்வாரி புதிதாக அமைத்தல், கரைகள் பலப்படுத்துதல், புதிய மதகுகள் அமைத்தல் போன்ற பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் குடிமராமத்து பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாக செய்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், பொறியாளர் ரமேஷ் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் சீர்பாதநல்லூர், கோணத்தான்கொட்டாய் ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.