வாய்க்கால் விரிவுபடுத்தும் பணிக்கு எதிர்ப்பு: மண்எண்ணெய் கேனுடன் கிராம மக்கள் போராட்டம் - சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் விரிவுபடுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் கேனுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சேத்தியாத்தோப்பு,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அங்கு திறந்தவெளி சுரங்கங்களை அமைத்து, நிலக்கரியை வெட்டி எடுத்து மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிற்கு வினியோகம் செய்கிறது. இதற்கு புதிய சுரங்கம் அமைப்பதற்காக என்.எல்.சி. நிர்வாகம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
ஆனால் கரிவெட்டி கிராம மக்கள், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு தந்தால்தான் நிலத்தை தருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். எனவே என்.எல்.சி. நிர்வாகம் அந்த கிராமத்தை மட்டும் கையகப்படுத்தாமல், சுற்றியுள்ள கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் என்.எல்.சி. சுரங்க நீரை கரிவெட்டி கிராமம் வழியாக உள்ள வாய்க்கால் வழியாக பரவனாற்றுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வாய்க்கால் சிறியதாக உள்ளதால், அந்த வழியாக சுரங்க நீரை வெளியேற்ற முடியாது. எனவே அந்த வாய்க்காலை விரிவுபடுத்துவதற்காக என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் நேற்று அங்கு வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் கரிவெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்தனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், இந்த வாய்க்காலில் அதிகளவு சுரங்க நீரை வெளியேற்றினால் எங்கள் கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்காலை விரிவுபடுத்தக்கூடாது. மீறி பணியை செய்தால் தீக்குளிப்போம் என்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அப்போது அதிகாரிகள், இது தொடர்பாக கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரையிலும் வாய்க்கால் விரிவாக்க பணியை செய்ய வேண்டாம் என்றும் கூறினர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகள், ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த 29-ந் தேதியும் வாய்க்கால் விரிவுபடுத்தும் பணியை தடுத்து நிறுத்தி கரிவெட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.