ரேஷன் கார்டுகளுக்கு தொடர்ந்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை - புதுவை சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சினை தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து பேசலாம் என்று ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், நாங்கள் கவர்னரை சந்திக்க வரமாட்டோம். வேண்டுமானால் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவாருங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
இந்தநிலையில் புதுவை சட்டசபையில் தொடர்ந்து இலவச அரிசி வழங்கும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை அரசின் முக்கிய நலத்திட்டமான இலவச அரிசி பல்வேறு இடையூறுகளுக்கு நடுவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் தலா 20 கிலோ வழங்கப்பட்டு வந்தது. எனினும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவாக குறைத்தும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ என தொடர்ந்து வழங்க உத்தரவிடப்பட்டது.
பிறகு இலவச அரிசிக்கு பதிலாக பணமாக நேரடி பணப்பரிமாற்றம் மூலம் கிலோவுக்கு ரூ.30 வழங்க ஏற்பட்ட மாற்று காரணத்தால் கடந்த ஆண்டில் 5 மாதங்கள் மாதத்துக்கு சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.600-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டது. பெருவாரியான மக்கள் இலவச அரிசி வழங்கவேண்டும் என்று தெரிவித்ததால் அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அரிசி வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.
மேலும் அரிசி விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் பணமாக கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும் என்ற நிலை பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் பணமாக வழங்குவதால் அதை அரிசிக்கு பயன்படுத்தாமல் வீண்விரயம் செய்துவிடுகிறார்கள்.
இலவச அரிசி தொடர்ந்து வழங்குவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இலவச அரிசி வழங்க டெண்டர் கோப்பு வைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் அரிசி வழங்க முடியவில்லை. இப்பேரவையின் முன்பு தொடர்ந்து அரிசி வழங்க தீர்மானம் நிறைவேற்றுமாறு அவைமுன் வைக்கப்படுகிறது.
பிராந்திய வாரியாக அரிசி போடுவதற்கான டெண்டர் நடவடிக்கையை அரசு எடுக்க இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது. மாநில மக்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து அரிசி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.