மரப்பாலம் சந்திப்பு பகுதி அகலப்படுத்தப்படும் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
மரப்பாலம் சந்திப்பு பகுதி அகலப்படுத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
ஜெயமூர்த்தி:- முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் வரை தினசரி ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை போக்கிட அரசின் திட்டம் என்ன?
முதல்-அமைச்சர் நாராயணசாமி:- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மரப்பாலம் சந்திப்பு மற்றும் முருங்கப்பாக்கம் சந்திப்புகளில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவலர்கள் இரு சந்திப்புகளிலும் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜெயமூர்த்தி:- இந்த சந்திப்பில் 5, 6 ரோடுகள் பிரிந்து செல்கின்றன. தேங்காய்த்திட்டு பகுதிக்கு இங்கிருந்து செல்லவே முடியவில்லை.
நாராயணசாமி:- இந்த பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை ஆட்சேபனையில்லை என்றால் அகற்றலாம். நைனார்மண்டபம் பகுதியில் நிறைய ஆக்கிரமிப்பு உள்ளது. அதை நீக்கினால் ரோடு விரிவாகும்.
அனந்தராமன்:- மரப்பாலம் சந்திப்பில் மின்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை எடுத்து ரோட்டை அகலப்படுத்தலாம்.
அமைச்சர் நமச்சிவாயம்:- பொதுப்பணித்துறை மூலம் ரோட்டை அகலப்படுத்த ரூ.30 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் 2014-ல் வந்த புதிய விதிகளின்படி அதிக செலவாகும். ரோட்டை 24 மீட்டர் அகலப்படுத்துவதா? அல்லது 30 மீட்டர் அகலப்படுத்துவதா? என்ற அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளது.
ஜெயமூர்த்தி:- 100 அடி என்பது கஷ்டமானது. 80 அடிக்கு விரியுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்:- மின்துறை இடத்தில் விரிவாக்குவது பெரிய விஷயமல்ல. அரியாங்குப்பம் பாலம் வரை இந்த பிரச்சினை உள்ளது.
அனந்தராமன்:- அதுவரை செய்ய காலதாமதமாகும். தற்காலிகமாக மின்துறை இடத்தில் செய்யுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்:- மின்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.