கடலில் மாயமான 4 மீனவர்களின் கதி என்ன? தாலுகா அலுவலகத்தில் உறவினர்கள் 3-வது நாளாக காத்திருப்பு
மல்லிபட்டினம் அருகே படகு கவிழ்ந்து கடலுக்குள் மாயமான 4 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் புதுரோடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 29-ந்தேதி மீன்பிடி படகு வாங்கிவந்தபோது தஞ்சாவூர் மல்லிபட்டினம் அருகே எதிர்பாராதவிதமாக படகு கடலில் மூழ்கியது.
இதையடுத்து 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இந்த நிலையில் அந்த வழியாக மீன் பிடிக்க படகில் சென்ற 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் தவிர மீதமுள்ள உமாகாந்தன், இலங்கேசுவரன், மதன், காந்தகுமார் ஆகிய 4 மீனவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக காத்துக் கிடக்கின்றனர்.
இதில் மீனவர் மதனின் மனைவி ஜெயலலிதா திடீரென மயங்கி விழுந்தார். இவர் கடந்த 3 நாட்களாக தனது குழந்தைகள் மது(5), மணிகண்டன்(3) ஆகியோருடன் சாப்பிடாமல் தூங்காமல் தாலுகா அலுவலக வளாகத்திலேயே காத்திருக்கிறார். தனது கணவர் உயிருடன் வரவேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தபடியே உள்ளார். இதேபோல மாயமான மீனவர் இலங்கேசுவரனின் தாயார் இறந்து விட்டதை தொடர்ந்து அவர் தனது சித்தி இந்திராவின் பராமரிப்பில் உள்ளார். இதுகுறித்து இந்திரா கூறும்போது, சம்பவத்தன்று இலங்கேசுவரன் கடலூர் செல்வதாக கூறியபோது காற்று பலமாக வீசுவதால் இப்போது செல்ல வேண்டாம் என்று கூறினேன்.
ஆனால் நான் வெளியே சென்று வருவதற்குள் அவன் மற்ற மீனவர்களுடன் புறப்பட்டு சென்று விட்டான். நான் அவனை செல்லமாக வளர்த்து வந்தேன் என்று தெரிவித்தார். மற்றொரு மீனவர் உமா கண்ணன்(19) என்பவரின் தாயார் வித்யா இறந்து விட்டார். இவர் தனது தந்தை உமயராஜ், தங்கை ஜெய்லானி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இதேபோல மாயமான காந்தகுமார்(23) என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், பாப்பா ஆகியோருடன் வசிக்கிறார். இவருக்கு நிசாந்த், சவுந்திரபாண்டி என்ற இரு சகோதரர்கள் உள்ளனர்.