ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று எதிரொலி: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் இழப்பு - வாழ்வாதாரமின்றி மீனவ குடும்பத்தினர் பரிதவிப்பு
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதன் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி ராமேசுவரத்தில் 800 விசைப்படகுகளும், பாம்பனில் 100 விசைப்படகுகளும், மற்றும் 800க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. இவ்வாறு மாவட்டம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3000க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் மீன்பிடி தொழிலை மட்டும் நம்பி பல ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீன்துறை அதிகாரிகள் படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்காமல் உள்ளனர். ராமேசுவரத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 800 விசைப்படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பாம்பன் பகுதியில் 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் துறைமுகம் மற்றும் பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதிகள் மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி பேட்ரிக் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரையில் பலத்த காற்று வீசுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரையிலும் காற்று பலமாக வீசி வருகிறது. வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கையை வைத்து மீன்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்காமல் உள்ளனர். கேரளாவில் ஓகி புயலுக்கு பின்னர் தான் காற்றை காரணம் காட்டி மீன்துறையினர் அப்பகுதி மீனவர்களை கடலுக்கு செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால் ராமேசுவரம் பகுதியில் வானிலை அறிவிப்பு வந்தவுடனேயே மீன்துறையினர் படகுகளை கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு காற்றின் நிலை குறித்து நன்கு தெரியும். காற்று வீசும் காலங்களில் மீனவர்களுக்கு உயிர் காக்கும் சாதனங்கள் அணிந்து தான் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு செல்லாதவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்தலாம். ஆனால் அதை விடுத்து காற்றை காரணமாக வைத்து அனுமதி டோக்கன் வழங்காமல் இருப்பது சரியல்ல. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதுபற்றி மீனவர் சங்க நிர்வாகி சேசுராஜா கூறியதாவது:- நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி தொழில் செய்து வருகிறேன். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனை பார்க்கும் போது பருவநிலை மாற்றம் பெரியளவில் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. ஆனால் வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீன்துறை அதிகாரிகள் உடனடியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து அனுமதி டோக்கன் வழங்க மறுக்கின்றனர். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்யும் போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து எந்த பகுதியில் காற்று அதிகளவில் உள்ளதோ அங்கு மட்டும் தடை விதிக்கலாம். அதை விடுத்து மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கின்றனர். இந்த ஆண்டு தடை காலத்திற்கு பிறகு நாங்கள் சரியாக ஒரு மாதம் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளோம். மற்ற நாட்களில் காற்கை காரணம் காட்டி எங்களை கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. காற்று அதிகமாக இருந்தால் நாங்கள் மீன்பிடிக்க செல்லமாட்டோம் என்று அதிகாரிகளுக்கு ஏற்கனவே எழுதி கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு மீன்பிடி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.