உளுந்தங்குடி அருகே புள்ளம்பாடி வாய்க்காலில் தற்காலிக பாலம் அகற்றம்
உளுந்தங்குடி அருகே புள்ளம்பாடி வாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் நேற்று அகற்றப்பட்டது.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடியில் புள்ளம்பாடி வாய்க்காலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக திருச்சியில் இருந்து திருப்ைபஞ்சீலி, மூவானூர், முசிறி, கரூர், நாமக்கல், மாயனூர், தீராம்பாளையம், திருவெள்ளரை உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வந்தன. மேலும் திருப்ைபஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கார் மற்றும் வேன்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் அந்த பாலம் குறுகிய அளவில் உள்ளதாலும், கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் பலமிழந்து காணப்பட்டதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 30 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட புதிய பாலத்தை நெடுஞ்சாலைத்துறை மூலமாக கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கியது.
இதையடுத்து புதிய பாலம் கட்டுமானப்பணி நடந்தபோது, உளுந்தங்குடியில் சுமார் 10 அடி நீளத்தில் 27 குழாய்கள் கொண்டு தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய பாலம் கட்டுமானப்பணி நிறைவுபெற்றது. மேலும் புள்ளம்பாடி வாய்க்காலில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் தற்காலிக பாலத்தின் வழியே செல்லும்போது தடை ஏற்பட்டு அதனால் வாய்க்காலின் இருபுறங்களிலும் தண்ணீர் செல்ல நேரிடும் நிலை ஏற்பட்டது. மேலும் ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள மண்பாதை வழியே செல்லும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் லால்குடி உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து தண்ணீர் தடையின்றி செல்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட குழாய்கள் பொருத்தப்பட்ட பாலத்தை அகற்ற பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அந்த பாலம் அகற்றப்பட்டதன் காரணமாக உளுந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மண்ணச்சநல்லூருக்கு வரவேண்டும் என்றால் அழகியமணவாளம் பாலம் சென்று சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு அங்கிருந்து தற்காலிகமாக உள்ள மண்பாதை வழியாகவே வரும் நிலை உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே புதிய பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.