அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு ஆசிரியர்கள் 18 பேருக்கு நல்லாசிரியருக்கான விருது, நவீன அடையாள அட்டைகளை வழங்கி விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சசிகுமாரின் கூனிச்சம்பட்டு அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன். அப்பள்ளி ஒழுக்கமாகவும், சுத்தமாகவும், பசுமையாகவும் காணப்பட்டது. அனைத்து இடங்களிலும் மாணவர்களுக்கான அறிவிப்பு பலகைகள் இடம்பெற்றுள்ளன. கழிவறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பள்ளியில் உள்ள வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களின் தரத்தை தலைமையாசிரியர் கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கி, பள்ளிகளில் அதனை செயல்படுத்த வேண்டும்.
தற்போது தேசிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. புதுவையில் அந்த நிலை ஏற்படாமல் தடுக்க அனைத்து பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதனை பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். தற்போது மழைக்காலம் வர உள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கட்டாயம் மழைநீரை சேமிக்க வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர் களுக்கு கல்வியை மட்டும் போதிக்காமல், அவர்களது குடும்ப சூழ்நிலைகளை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் பொதுஅறிவையும் வளர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விளையாட்டினை வளர்க்க வேண்டும். இதற்கு புதுவை அரசு பள்ளி ஆசிரியர்கள் கொண்ட குழுவை உருவாக்கி, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, மதிப்பீடு வழங்க வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்களின் கல்வி கற்கும் திறன் உயரும். இதற்கான நடவடிக்கைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
அகில இந்திய அளவில் கல்வியில் நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம். 17 சிறிய மாநிலங் களில் முதன்மையான மாநிலம் புதுச்சேரி என்ற பெருமையை கல்வியில் பெற்றுள்ளோம். எந்த சூழ்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்க பல யுக்திகளை கடைபிடிக்கின்றனர்.
அந்த பிள்ளைகள் படித்துவிட்டு வெளியே வரும்போது மனப்பாடமாக பேசுவார்கள், மனப்பாடமாக சொல்வார்கள். ஆனால் அரசு பள்ளியை பொருத்தவரையில் அவ்வாறு இல்லாமல் கிராமப்புற மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர அவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கப்படுகிறது. மாணவர்களை சிறந்தவர்களாக ஆக்கும் பெருமை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது எனவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என்று சொல்கின்றனர். நாங்கள் உங்களை (ஆசிரியர்களை ) கேட்டுக்கொள்வதெல்லாம், அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற 18 ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.