கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-05 21:45 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு இந்திய தொழிற் சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற் சங்க மைய மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இச்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நூறாண்டுகள் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங் களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்யப்படுவது, நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளான கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலையை தீர்மானிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்காக கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் செயல்படுவது போன்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கையை நடைமுறைப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்