பெரியபாளையம் அருகே டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு

பெரியபாளையம் அருகே டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-04 22:30 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தம்புநாயுடுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும், அப்பு என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை ஹரிபாபு பெரியபாளையம் நோக்கி தண்டலம் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தண்டலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டிராக்டரை அதன் டிரைவர் திடீர் என்று பிரேக் பிடித்தார். இதில் டிராக்டரின் பின்புறம் ஹரிபாபுவின் மோட்டார்சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஹரிபாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஹரிபாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்