தியாகதுருகம், கள்ளக்குறிச்சி பகுதியில், 3 பஸ்கள் மீது கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு

தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் கல்வீசி 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-04 22:30 GMT
கண்டாச்சிமங்கலம், 

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் மேம்பாலத்தில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் சேலம் மற்றும் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 தனியார் பஸ்கள் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது மர்மநபர்கள், அந்த 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் அந்த 2 பஸ்களின் கண்ணாடி உடைந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்