மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக 227-வது வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்குள்ள மின் இணைப்பு வயர்களை துண்டித்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.