கோரேகாவில் 2 போலி டாக்டர்கள் கைது

கோரேகாவில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-09-03 21:40 GMT
மும்பை, 

மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியில் உள்ள கிளினிக்கில் பொதுமக்களுக்கு புற்றுநோய்க்கு போலியான சிகிச்சை அளித்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் போலீசார் அந்த கிளினிக்கிற்கு சென்று விசாரணை நடத்தினர். இ்ந்த விசாரணையில் ராகுல் (வயது34) என்பவர் மருத்துவ படிப்பு இல்லாமல் போலி டாக்டராக செயல்பட்டு சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து வன்ராய் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதே போல அப்பகுதியில் முறையான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்த குரு கோவிந்த் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்