ரெயில் நிலைய கேண்டீன்களில் பணம் பறித்த போலி அதிகாரி கைது

தானே மாவட்டம் பத்லாப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீன்களில் அதிகாரி ஒருவர் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக கூறி பணம் பறித்து வருவதாக கர்ஜத் ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது.

Update: 2019-09-03 21:30 GMT
அம்பர்நாத், 

ரெயில்வே போலீசார் அங்கு சென்று இந்த புகார் தொடர்பாக தீவிரமாக கண்காணித்தனர். அப்போது புகார் தெரிவிக்கப்பட்ட அந்த அதிகாரி அங்குள்ள கேண்டீன்களில் ஆய்வு நடத்தி பணம் பறிப்பு வேலையில் ஈடுபட்டார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், தான் கேட்டரிங் அதிகாரி என கூறி, அவர் வைத்திருந்த அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்தார். அதனை வாங்கி போலீசார் சோதனை நடத்திய போது அது போலியானது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த போலி அதிகாரியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர்.

இதில், அவர் மிராரோட்டை சேர்ந்த அன்வர் முகமது கான் (வயது40) என்பதும், பத்லாப்பூர், கர்ஜத் ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே கேண்டீன்களில் அதிகாரி போல் நாடகமாடி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்