மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது.

Update: 2019-09-03 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் விதமாக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 74 கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, துண்டு பிரசுரங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்