மயிலம் அருகே, பள்ளி மாணவி, தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

மயிலம் அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-03 21:45 GMT
மயிலம்,

மயிலம் அருகே உள்ள கொல்லியங்குணம் புதுகாலனியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் பிரியா(வயது 17). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பிரியா உயிரிழந்தார். இது குறித்து பிரியாவின் சித்தப்பா மணிகண்டன் மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா உடல் நலக்கோளாறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்