அண்ணாநகரில் சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் ராட்சத பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
அண்ணாநகரில் உள்ள சாலையில் 15 அடி ஆழத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பூந்தமல்லி,
அண்ணா நகர், சாந்தி காலனி 4-வது அவென்யூ சாலையில் நேற்று காலை திடீரென 15 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், ராட்சத பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்தனர். மேலும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பூமிக்கு அடியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால், அனைத்து கழிவுநீர் இணைப்புகளும் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.