குப்பைகளை தரம் பிரித்து பெறுவதில் மதுரை மாநகராட்சி பின்தங்கி உள்ளது - திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் தகவல்
குப்பைகளை தரம் பிரித்து பெறுவதில் மதுரை மாநகராட்சி பின் தங்கி உள்ளது என்று திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.;
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து கையாளும் முறையினை மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடாம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி ஒவ்வொரு மாநகராட்சியும், நகராட்சியும் வீடு வீடாக குப்பைகளை வாங்கும்பொழுது தரம் பிரித்து வாங்க வேண்டும். அதேபோல் பொதுமக்களும் மாநகராட்சிக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும்.
இதுகுறித்து மற்ற மாவட்டங்களில் பார்வையிட்டபோது குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் 60 சதவீதமும், திருச்சி, நெல்லை மாநகராட்சியில் 50 சதவீதமும், சென்னையும், மதுரையும் 24 சதவீதம் மட்டுமே குப்பைகள் தரம் பிரித்து பெற்று பின்தங்கி உள்ளன. மதுரை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என 630 டன் சேகரிக்கப்படுகிறது. அதில் 60 சதவீதம் மக்கும் குப்பையாகவும், 40 சதவீதம் மக்காத குப்பையாகவும் இருக்கின்றன. மக்கும் குப்பைகளை உரமாக்க மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 இடங்களில் நுண்ணுயிர் உரக்கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும்.
எந்தவொரு குப்பைகளையும் ஒரு நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருக்க மாட்டோம் என்பது தான் நமது மக்களின் மனநிலையாக உள்ளது. மக்காத குப்பைகளை தனியாக மூட்டைக்கட்டி வாரத்திற்கு ஒரு நாள் புதன்கிழமை வழங்க வேண்டும். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் மாநகராட்சியின் 50 சதவீதம் வேலை முடிந்து விடும். குப்பைகளை அதிகமாக உற்பத்தி செய்யும் ஓட்டல்கள், குடியிருப்போர் சங்கங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை சட்டத்தின்படி தங்கள் பகுதிகளிலேயே குப்பைகளை கையாள வேண்டும். இல்லையென்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
மதுரை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக சுமார் 509 பேட்டரி வாகனங்களும், 99 திடக்கழிவு இலகு ரகவாகனங்களும் வாங்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் முழுமையாக வந்த பிறகு மதுரை மாநகராட்சி பகுதிகள் சுத்தமாக பராமரிக்கப்படும். அதற்கு பொதுமக்களும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மருத்துவமனைகளும் தங்களது கழிவுகளை கவனமாக கையாள வேண்டும். கட்டிட கழிவுகளையும் கண்ட இடங்களில் கொட்டாமல் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வெள்ளக்கல் குப்பை கிடங்கு, ஹார்விப்பட்டி மாநகராட்சி பூங்கா, மாநகராட்சி நீச்சல் குளம் எதிரில் செயல்படும் நுண்ணுயிர் உரக்கிடங்கு, கருப்பாயூரணி ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம், மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட், காய்கறி உரக்கிடக்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.