கந்திகுப்பம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கன் கடை உரிமையாளர் கைது

கந்திகுப்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிக்கன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-02 22:15 GMT
பர்கூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 35). சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது சிக்கன் கடையில் இருந்த கழிவு பொருட்களை மோட்டார்சைக்கிளில் எடுத்து சென்று அருகில் உள்ள சாலையோரம் போட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த சவுந்தர் அந்த சிறுமியின் அருகில் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சவுந்தர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப் படுகிறது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிக்கன் கடை உரிமையாளரான சவுந்தரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்