பாகூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்திய 12 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 2 பேர் கைது
பாகூர் தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 12 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகூர்,
பாகூர் தென் பெண்ணை ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி மாட்டு வண்டிகள் மற்றும் மினி லாரிகளில் மணல் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகூர் தென் பெண்ணை ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை மாட்டு வண்டிகளில் பாகூர் ஏரிக்கரை வழியாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாகூர் ஏரிக்கரைக்கு சென்றனர். அப்போது தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளி 12 மாட்டு வண்டிகளில் ஏற்றி ஏரிக்கரை வழியாக கடத்தி வருவதை பார்த்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் 10 மாட்டு வண்டிகளின் வண்டி ஓட்டிகள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் இரண்டாயிரம் வளாகம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 30), புருஷோத்தமன் (29) என்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.