தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் அபேஸ்: கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவம் - போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கோபியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் அபேஸ் செய்த வழக்கில், அந்த பகுதியில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள பங்களாப்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). தொழில் அதிபரான இவர் கடந்த 31-ந் தேதி கோபிக்கு வந்து அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.10 லட்சத்தை எடுத்து அதை ஒரு பையில் போட்டு காருக்கு கொண்டு வந்து வைத்தார். இதை மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் நோட்டமிட்டனர்.
பின்னர் அதில் ஒருவர், சிவக்குமாரின் கார் டயர் பஞ்சராகி உள்ளது என அவருடைய கவனத்தை திசை திருப்பியதுடன், பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்து விட்டு ஏற்கனவே அங்கு மோட்டார்சைக்கிளில் தயாராக இருந்த மற்றொருவருடன் ஏறி தப்பி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைந்து உள்ளனர்.
அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்ததுடன், அவர் பணப்பையை தூக்கி கொண்டு ஓடியதும் தெரிகிறது.
இதை வைத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.