ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - த.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று த.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அ.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.
செயலாளர் ரா.மயில்துரையன், மாநகர இணைச்செயலாளர் குணா, மாவட்ட பொருளாளர் ராமு, தொழிற்சங்க செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஈரோட்டை சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய -சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இரவு நேரங்களில் நீர்நிலைகளில் திறந்து விடப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வருகிற 11-ந் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரின் குரு பூஜை நடக்கிறது. இதில் த.ம.மு.க. நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்கிறார். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் தியாகி இமானுவேல் சேகரின் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
பவானி ஆற்றில் கொடிவேரி அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு வரை 5 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். ஈரோடு புறநகர் பகுதிகளில் ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ கருவிகள் மற்றும் டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகர இணைச்செயலாளர் பூபதி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் அன்னக்கொடி, சத்யா காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.