மயிலாடுதுறையில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

மயிலாடுதுறையில் 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-09-01 22:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிழந்தூரில் 10 அடி உயரமுள்ள தும்பிக்கை ஆழ்வார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகருக்கு அருகம்புல், வெள்ளெருக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர்

விநாயகருக்கு அவல், பொறிகடலை, நாவல்பழம், விலாம்பழம், மாம்பழம் ஆகியவற்றை வைத்து தீபாராதனை நடைபெற்றது.

மல்லியத்தில் அரசமரத்தடி விநாயகர், ஆணைமேலகரத்தில் ராஜவிநாயகர், மகாராஜபுரத்தில் சுந்தரவிநாயகர், மூவலூரில் வழித்துணை விநாயகர், நல்லத்துக்குடியில் செல்வவிநாயகர், மயூரநாதர் கீழவீதியில் பரிவாரவிநாயகர், இந்திரா காலனியில் அருள்சக்திவிநாயகர், மயூரநாதர் மேல வீதியில் ஆழிகாட்டி விநாயகர் உள்பட 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

இன்று(திங்கட்கிழமை) விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

கரைக்கப்படுகின்றன

நாளை (செவ்வாய்க்கிழமை) வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக ரெயிலடி காவேரி நகர், காந்திஜி சாலை, மணிக்கூண்டு வழியாக காவிரி துலாகட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டு காவிரியில் கரைக்கப்படுகின்றன. நாளை இரவுக்குள் காவிரி துலாகட்டத்தில் தண்ணீர் வந்து சேராமல் இருந்தால் அனைத்து வினாயகர் சிலைகளும் பூம்புகார் கடலுக்கு கொண்டு செல்லபட்டு அங்கு கடலில் கரைக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்