கொரடாச்சேரி, திருமக்கோட்டையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடந்தது.;

Update:2019-09-02 04:00 IST
கொரடாச்சேரி,

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடந்தது. கொரடாச்சேரியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு பேரூராட்சி தனி அலுவலர் செந்திலன் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் மண்டல துணை தாசில்தார் பென்சய்லால், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பத்தூர், விஸ்வநாதபுரம், மாங்குடி ஆகிய இடங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதேபோல திருமக்கோட்டை கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மன்னார்குடி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் தங்கமணி, கோட்டூர் உதவி வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன், தலையாமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்குமார், மகேஸ்வரி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மனுக்களும், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்