துலே அருகே பயங்கரம்: ரசாயன ஆலையில் வெடி விபத்து, 13 தொழிலாளர்கள் பரிதாப சாவு - 64 பேர் படுகாயம்
துலே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 64 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா வாகதி கிராமத்தில் உள்ள ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று சுமார் 100 பேர் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டு இருந்தனர். காலை 9.45 மணி அளவில் ஆலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. உடனே தீயும் பற்றி எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
ஆலை முழுவதும் தீ பரவியதால் தொழிலாளர்கள் பலர் உள்ளேயே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்தனர்.
ஆலையில் 2 பனை உயரத்துக்கு தீ ஜூவாலை எழுந்ததால், உடனே தீயை அணைக்க முடியவில்லை. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்டபோது 6 பெண்கள் உள்பட 13 தொழிலாளர்கள் பலியானது தெரியவந்தது. அவர்கள் உடல் சிதறியும், கரிக்கட்டையாகியும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 64 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தின் போது ரசாயன ஆலையில் தொடர்ச்சியாக அணுகுண்டுகள் வெடித்தது போல சத்தம் கேட்டன. காதை பிளக்கும் இந்த சத்தம் காரணமாக அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ என கருதி வீட்டை விட்டு தலைதெறிக்க வெளியேறி வந்தனர். அதன்பின்னர் தான் அவர்களுக்கு ரசாயன ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிவது தெரியவந்தது.
இந்த ஆலையில் ரசாயனம் அடங்கிய ஏராளமான பேரல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதேபோல நைட்ரஜன் சிலிண்டர்களும் அதிக அளவில் இருந்தன. ஒரு பேரலில் இருந்து ரசாயன வாயு கசிந்து உள்ளது. இதன் காரணமாக நைட்ரஜன் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து உள்ளன. இது பெரும் தீ விபத்துக்கு வழிவகுத்து விட்டது. இந்த ஆலையில், மருந்துகளுக்கான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதற்கிடையே தீ விபத்து பற்றி அறிந்ததும் தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் கதறி அழுதபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காட்சி அளித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.