பரமக்குடி அருகே பார்த்திபனூரில் 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
பரமக்குடி அருகே பார்த்திபனூரில் 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து 9 பவுன் தங்க நகை, 7 கிலோ வெள்ளி உள்பட செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே பார்த்திபனூர் பஜாரில் மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சரவணன்(வயது 52) நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இதன் அருகாமையில் பரமக்குடியை சேர்ந்த இஸ்சாஸ் அகமது என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 2 வியாபாரிகளும் வழக்கம் போல் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு நேற்று காலை கடைகளை திறக்க வந்தனர். அப்போது இரு கடைகளின் பூட்டுகளும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடைகளின் உள்ளே சென்று பார்த்தனர்.
நகை கடையின் உள்ளே இருந்த 9 பவுன் தங்க நகை, 7 கிலோ வெள்ளி மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள செல்போன் கடையில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 7 செல்போன்கள் மற்றும் ரூ.1500 ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கமுதி சாலையில் முத்து(51) என்பவரின் வீடு உள்ளது. இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள் பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் பார்த்திபனூர் போலீசார், பரமக்குடி நகர் குற்றப் பிரிவு போலீசார் ஆகியோர் சம்பவ இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.