ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது கலெக்டர் அறிவுறுத்தல்

ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-08-31 22:30 GMT
திருவாரூர்,

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள், கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல்

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது.

விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூரில் ஓடம்போக்கியாறு, முத்துப்பேட்டை பாமணியாறு ஆகிய இடங்களில் மட்டும் தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகி தகவல்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்