கூரியர் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.6½ லட்சம் வைர நகைகள் கொள்ளையடித்தவர் சிக்கினார் 15 வழக்குகளில் தொடர்புடையவர்

கூரியர் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.6½ லட்சம் வரை நகைகள் கொள்ளையடித்தவர் மும்பையில் சிக்கினார்.

Update: 2019-08-29 22:05 GMT
மும்பை,

குஜராத் மாநிலத்தில் பட்டான் பகுதியில் கடந்த 13-ந்தேதி கூரியர் நிறுவன ஊழியர் ஒருவரை 14 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரிடம் பார்சலில் இருந்த ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றது.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளி சுதிர் ஷிண்டே என்பவரை போலீசார் பிடிக்க முயன்ற போது துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இந்தநிலையில் தப்பி சென்ற சுதிர் ஷிண்டே மும்பைக்கு தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் போலீசார் மும்பை குற்றப்பிரிவு போலீசாருடன் சேர்ந்து மும்பையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது மலாடு பகுதிக்கு வரவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சுதிர் ஷிண்டேவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டி பணம்பறிப்பு உள்பட 15 வழக்குகள் மும்பை, நவிமும்பை மற்றும் குஜராத் மாநில போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்