ஸ்ரீரங்கத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை அமைச்சர்கள் வழங்கினர்

ஸ்ரீரங்கத்தில் நடந்த முகாமில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர்கள் வழங்கினர்.

Update: 2019-08-29 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1 முதல் 6 வார்டுகளுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

முன்னதாக விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என மொத்தம் 40 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

முகாமில் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், நிர்வாக அலுவலர் ரமேஷ், இளநிலை பொறியாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் கோட்ட அ.தி.மு.க. செயலாளர் டைமன் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் வரவேற்றார். முடிவில் தாசில்தார் சுப்ர மணியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்