ஓட்டப்பிடாரம் பகுதியில் குடிமராமத்து பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

ஓட்டப்பிடாரம் பகுதியில் குடிமராமத்து பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-08-29 22:30 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் ஊருக்கு நூறு கை திட்டத்தில் மந்தைகுளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட சிறப்பு பார்வையாளர் பிரனவ் குல்லர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பணியாற்றி வந்த மக்களின் பணிகள் குறித்தும், மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினர். தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பரிவல்லிக்கோட்டையில் உள்ள செவல்குளத்தில் ரூ.5 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மழைக்காலம் வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டினர்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட உதவி திட்ட இயக்குனர் கென்னடி, யூனியன் ஆணையாளர் ராமராஜ், கூடுதல் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்