அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரத்து வாய்க்கால், ஏரிகளை தூர்வார வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரத்து வாய்க்கால், ஏரிகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசுகையில், சுக்கிரன் ஏரி கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் அரியலூர் மாவட்ட பகுதிக்கு வருவதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், வரத்து வாய்க்கால்களையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் பயிர் கடன் வழங்க வேண்டும். அரியலூரில் கிடப்பில் உள்ள மின்மயான பணியை உடனே தொடங்கி பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றார்.
அனுமதியளிக்க வேண்டும்
விவசாய சங்க பிரதிநிதி அம்பேத்கர்வழியன் கூறுகையில், திருமானூர், திருமழபாடி, வரப்பன்குறிச்சி உள்பட 9 இடங்களில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு அதனை வீடு இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு வழங்க வேண்டும். அழகியமண வாளன் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் செம்படையான் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளதால், பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் கிடைக்காததால், திருமானூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு திட்ட வீடுகள் கிடப்பில் உள்ளது. ஆகவே கொள்ளிடத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதியளிக்க வேண்டும். திருமானூரை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என்றார்.
சாலையை சீர்செய்ய...
ஜெயச்சந்திரன் கூறுகையில், ஆண்டிமடத்திலுள்ள அனைத்து கிணறுகளையும் தூர்வார வேண்டும், என்றார்.
விஸ்வநாதன் கூறுகையில், மணப்பத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தங்க.சண்முகசுந்தரம் கூறுகையில், கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியை தூர்வார வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக பொன்னேரிக்கு நீரை திருப்பிவிட வேண்டும். பொன்னேரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரியைச் சுற்றி நாவல், இலுப்பை, பனை உள்ளிட்ட பலவகை மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றார். சமூக ஆர்வலர் சோழன்குடிக்காடு கணேசன் கூறுகையில், தாமரைப் பூண்டியில் இருந்து ஆணைவாரி ஓடைப்பாலம் வழியாக முல்லையூர் வரையுள்ள சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் வினயிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.