தேர்வாய்கண்டிகை, கண்ணங்கோட்டை ஏரிகளை இணைத்து அமைக்கப்படும் புதிய நீர்த்தேக்கத்தை பருவமழைக்கு முன்பு திறக்க திட்டம்
தேர்வாய் கண்டிகை - கண்ணங்கோட்டையில் உள்ள 2 ஏரிகளையும் இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்து வட கிழக்கு பருவமழைக்கு முன்பாக திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
சென்னைக்கு தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கும் குடிநீர் சில நேரங்களில் போதுமானதாக இல்லை. அந்த நீர்த்தேக்கங்களில் சேமித்து வைக்கப்படும் நீரும், சென்னை மாநகர மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பதில்லை.
இந்த குறையை போக்கும் வகையில், சென்னை குடிநீர் திட்டத்துக்கு பயன்படும் வகையில் 5-வது நீர்த்தேக்கத்தை உருவாக்க கடந்த 2012-ம் ஆண்டு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய்கண்டிகை பெரிய ஏரியையும், அதன் அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து கூடுதலாக நிலத்தை அதில் சேர்த்து 1,495.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடி செலவில், ஆயிரம் மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இந்த பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் வருகிற அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை இந்த நீர்த்தேக்கத்தில் தேக்கிவைப்பதற்காக பணியை விரைவுபடுத்தி ஏரியை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னைக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி, தண்ணீர் தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள நீர்த்தேக்கங்களின் மூலம் 11 டி.எம்.சி, தண்ணீர் சேமிக்கப்படுகிறது. போதிய மழை பெய்யாததால் நீர் போதுமானதாக இருக்காது. எனவே தான் கூடுதலாக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுகிறது. கண்ணங்கோட்டை, தேர்வாய்கண்டிகை பகுதியை தேர்வு செய்து அங்கு ஏற்கனவே இருக்கும் ஏரியின் பரப்பளவுடன் கூடுதலாக 600 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 600 ஏக்கர் பட்டா நிலம், 40 ஏக்கர் வனப்பகுதி சேர்க்கப்பட்டன.
இவற்றை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டு நீர்த்தேக்கத்துக்கான நிலத்தை ஆழப்படுத்தி சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
கண்டலேறு-பூண்டி கால்வாயில் இருந்து புதிய நீர்த்தேக்கத்துக்கு வாய்க்கால் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தனியார் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக சிலர் கோர்ட்டுக்கு சென்றதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் பணியை விரைந்து முடித்து, வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை நீரை இதில் தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விரைவில் ஏரி திறக்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு இடையில் அப்பகுதியில் நீரை சுத்திகரிக்கும் நிலையம், நீரேற்று நிலையம் போன்றவற்றை சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அமைத்து வருகிறது. இந்தப்பணி நிறைவடைந்ததும் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய தொடங்கும். இதில் 1½ டி.எம்.சி வரை தண்ணீரை சேமிக்க முடியும்.
அக்டோபர் மாதத்தில் மழை பொய்த்து போனாலும் கூட, சென்னை மக்களுக்கு 1½ மாதங்களுக்கு நீர் வினியோகம் செய்வதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும்.
சென்னை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீரையும், பருவகாலங்களில் பொழியும் மழைநீரையும் கூடுதலாக தேக்கி வைக்க, இந்த நீர்த்தேக்கம் பயன்படும். இதுதவிர மேலும் 2 நீர்த்தேக்கங்களை அமைத்தால், சென்னை மாநகரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாநகரமாக மாற்ற முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.