அரசு வழங்கும் மானியத்தை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் அமைச்சர் காமராஜ் பேச்சு
அரசு வழங்கும் மானியத்தை விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
குடவாசல்,
குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி 1 மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட உள்ளது.
முதியோர் உதவித்தொகை
நன்னிலம் தொகுதியை பொறுத்தவரை ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக உள்ளது. இருந்தாலும் ஏழை, எளிய மக்களின் வயது முதிர்வை கணக்கிட்டு பலர் முதியோர் உதவித்தொகை வேண்டி மனு செய்துள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தபோது தமிழகத்தில் 50 லட்சம் முதியோர்களுக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே இப்பகுதியில் முழு தகுதியுடைய முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். காவிரியில் தண்ணீர் திறந்தும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என கூறப்படுகிறது. சில இடங்களில் உள்ள ஆறுகளில் பாலம் கட்டுமான பணி, தூர்வாரும் பணிகள் நடப்பதால் தண்ணீர் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
விதை மானியம்
சம்பா சாகுபடிக்கு அரசு வழங்கக்கூடிய உழவு மானியம், விதை மானியம் ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதேபோல விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தாசில்தார் ஜீவானந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஓகை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அரசன்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.