சிவகங்கை ஒன்றிய பகுதிகளில் ரூ.181 கோடியில் திட்டப்பணிகள்
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.181 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை,
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மானாகுடி, சக்கந்தி, அரசனிமுத்துப்பட்டி, வாணியங்குடி, கொட்டகுடி கீழ்பாத்தி ஆகிய ஊராட்சிகளில் ரூ.75.75 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:- சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் கடந்த 3 மாத காலத்தில் சாலைப்பணி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை வீடு திட்டம், தனிநபர் கழிப்பறை திட்டம், மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட 17 திட்டப்பணிகள் ரூ.181 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தார்ச்சாலைகளையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பசுமை வீடு திட்டத்தில் 445 வீடுகள் தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்து ஊராட்சியிலும் ரூ.20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தவிர ரூ.75 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள் சீரமைத்தல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
கலெக்டருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ரஜினிதேவி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.