கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 பேர் பலி

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-08-28 22:15 GMT
கல்பாக்கம்,

கல்பாக் கத்தை அடுத்த விளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜபருல்லா (வயது 40). இவர் தனது உறவினர் முசாதிக் (34) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் வந்து கொண்டிருந்தார் .பின்னர் அங்கிருந்து இருவரும் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சீக்கிணாங்குப்பம் கிராமம் அருகே வந்தபோது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜபருல்லா பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முசாதிக்கை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்