திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.35 லட்சம் நிலமோசடி - தந்தை, மகன் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.35 லட்சம் நிலமோசடியில் ஈடுபட்டது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.;

Update:2019-08-29 04:45 IST
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசு. இவருக்கு அதே பகுதியில் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.35 லட்சம். இந்த நிலத்தை அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் எழிலரசனின் நிலத்தை அவரது தந்தை குப்புசாமி (வயது74) போலி ஆவணம் தயாரித்து தனது 2-வது மனைவியின் மகனான நந்தகுமார் (42) பெயரில் செட்டில்மென்ட் செய்து வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதை அறிந்த எழிலரசு திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யகுமார், பிலோமோன், சையத் செரிப், பக்கிரிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நிலமோசடியில் ஈடுபட்ட குப்புசாமி, நந்தகுமார் ஆகியோரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்