கத்தி முனையில் வழிப்பறி; 4 பேர் கைது
கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நேற்று அதிகாலை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் முகத்தில் கர்சீப் (கைக்குட்டை) கட்டியவாறு கடை உரிமையாளர் சிவா (வயது 25) என்பவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இருப்பினும் போலீசாரும் மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்திச்சென்று எளாவூர் அருகே 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கிருந்து தப்பி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் புழல் அடுத்த காவங்கரையை சேர்ந்த சண்முகபாண்டியன் (28), செங்குன்றம் நாரவாரிக்குப்பத்தை சேர்ந்த அப்பு என்கிற சாயின்ஷா (23), பாலவாயிலை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) மற்றும் பாடி கலைவாணர் நகரை சேர்ந்த 17 வயது உடைய சிறுவன் என்பது தெரியவந்தது.
போலீசார் துரத்தி சென்றபோது மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சண்முகபாண்டியனும், சாயின்ஷாவும் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பிடிபட்ட சண்முக பாண்டியன் ஏற்கனவே சோழவரம் போலீசாரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் அனைவரும் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.
நேற்று முன்தினம் நள்ளிரவு செங்குன்றம் முதல் கும்மிடிப்பூண்டி வரை பல்வேறு இடங்களில் பலரை கத்தி முனையில் தாக்கி அவர்களது பணம், செல்போன்கள் போன்றவற்றை வழிப்பறி செய்து விட்டு கடைசியாக கும்மிடிப்பூண்டியில் கத்தி முனையில் பணம் பறித்தபோது இந்த கும்பல் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து 8 செல்போன்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை புறநகரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு, சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.