பேரையூர் பகுதியில் தொடர் வறட்சி: மான்களை பாதுகாக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுமா?
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பேரையூர் பகுதியில் வறட்சி நீடிப்பதால் தண்ணீர் தேடி வரும் மான்களின் உயிரிழப்பு தொடருகிறது. மான்களை பாதுகாக்க கண்மாய் பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.;
பேரையூர்,
பேரையூர் பகுதியிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் இதர பகுதிகளில் மழை பெய்தாலும் இந்த பகுதி மட்டும் மழை மறைவு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் இங்கு வசித்த மான்கள் இரை மற்றும் தண்ணீருக்காக மலையில் இருந்து இடம் பெயர்ந்தன.
சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூட்டம் கூட்டமாக வந்து பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் தஞ்சம் புகுந்தன. அங்குள்ள சீமைக்கருவேல மரங்களுக்கு மத்தியில் அவை வசிக்கின்றன. பேரையூர் மற்றும் திருமங்கலம், கள்ளிப்பட்டி பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மான்கள் வசிக்கின்றன.
வனத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த நிலையில் கண்மாய்களில் அடைபட்டுக்கிடந்த போதும் அவற்றுக்கு அடுத்த கட்ட சோதனையாக வறட்சி வந்து விட்டது. சமீப காலமாக போதிய மழை இல்லாமல் கண்மாய்கள் வறண்டு போனதால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மான்கள் தவிக்கும் நிலை உருவானது.
இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு களுக்கு வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் வரும் அந்த மான்களை நாய்கள்தான் வரவேற்கின்றன. அவை மான்களை துரத்திச்சென்று கடித்து விடுகின்றன. இந்த வகையில் சுமார் 100 மான்கள் உயிரிழந்து விட்டன. மேலும் அந்த பகுதியில் சாலையை கடந்து வரும்போது வாகனங்களில் சிக்கியும் பலியாகின்றன. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 மான்கள் அநியாயமாக இறந்துள்ளன. சில மான்கள் மட்டும் காயத்துடன் தப்பின. அவற்றை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். குணமடைந்த மான்கள் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொண்டு போய் விடப்படுகின்றன.
இங்கு மான்கள் அதிகமாக வாழ்வதால் சரணாலயம் அமைக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகும். ஆனால் கண்மாய் பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருவதால் அவற்றை வனத்துறை வசம் கொண்டு வருவது எளிதானதல்ல என்று கூறப்படுகிறது.
எனவே உடனடி நடவடிக்கையாக, கண்மாய் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் தொட்டிகளை கட்டி நீர் நிரப்பினால் மான்கள் குடியிருப்புகளுக்குள் வந்து நாய்களிடம் சிக்கி உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.