சேலத்தில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது

சேலத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-08-27 22:15 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சீனிவாசன் (வயது 31), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அம்மாபேட்டை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்து இருந்த ½ பவுன் மோதிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து சீனிவாசன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் லைன்மேடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சண்முகம் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சீனிவாசனிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து கொண்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சண்முகத்தை கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட சண்முகம் மீது ஏற்கனவே அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்