ரூ.79 லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி: 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
ரூ.79 லட்சத்தில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் அண்ணாதுரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த நாகத்தி மற்றும் அம்மன்பேட்டையில் ராஜேந்திரன் வாய்க்காலில் 9½ கிலோ மீட்டர் தூரமும், பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் பிள்ளை வாய்க்காலில் 7½ கிலோமீட்டர் தூரமும், தீபாம்பாள்புரத்தில் விக்ரமானார் வாய்க்காலில் 4 கிலோமீட்டர் தூரமும் ரூ.20 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், ஆலங்குடி கிராமத்தில் புத்தூர் வடிகாலில் 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும், உடையாளூரில் காவிரி வடிநில கோட்டம் முடிகொண்டான் ஆறு ரூ.16 லட்சத்தில் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். அப்போது அவர், தூர்வாரும் பணி முறையாக நடக்கிறதா? என ஆழம் மற்றும் அகலத்தை அளந்து பார்த்தார்.
2 கிலோமீட்டர்
தஞ்சை மாவட்டத்தில் சுந்தரபெருமாள் கோவில், திருவலஞ்சுழி, தாராசுரம், செம்பியவரம்பல் ஆகிய கிராமங்களில் ரூ.79 லட்சம் மதிப்பில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருநாகேஸ்வரம் சுற்றுவட்ட சாலை அருகே அரசலாற்றங்கரையில் 2 கிலோமீட்டர் தூரம் கலெக்டர் அண்ணாதுரை நடந்து சென்று தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா? என பார்வையிட்டார்.
மேலும் ஆத்தூர் கிராமத்தில் வெண்ணாற்றில் 73,500 மீட்டர் தூரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி ரூ.20 லட்சத்தில் நடைபெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர், கரைக்கும், தடுப்பு சுவருக்கும் இடையே உள்ள இடைவெளியில் மண் நிரப்பி கரைகளை பலப்படுத்துமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர், கும்பகோணம் தாலுகா திம்மக்குடி கிராமத்தில் காவிரி ஆற்றின் இடதுகரையில் இன்னம்பூர் தலைப்பு மதகு மறுகட்டுமான பணி மற்றும் இன்னம்பூர் வாய்க்கால் ரூ.20 லட்சத்தில் தூர்வாரப்படுவதையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அக்ரஹாரம் மேட்டுக்குளம் தூர்வாரப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏதுவாக பாசன கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.