நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை தொடக்கம்
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் மூலம் நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் மூலம் நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் நரிக்குறவர்கள் மற்றும் சீர்மரபினர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்தல், நரிக்குறவர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தல், நரிக்்குறவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகைக்கு தகுதியான விண்ணப்பங்களை பெற்று மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்புதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பெரம்பலூர் வட்டத்தில் மலையப்பநகரிலும், அன்று மாலை 3 மணிக்கு வேப்பந்தட்டை வட்டத்தில் எறையூரிலும், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு குன்னம் வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அன்று மாலை 3 மணிக்கு ஆலத்தூர் வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நலத்திட்ட உதவிகள் குறித் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த விழிப்புணர்வு முகாமில் நரிக்குறவர்கள் மற்றும் சீர்மரபினர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.