ஜெர்மன் பெண்ணை மணந்த ஆந்திர என்ஜினீயர் இந்து முறைப்படி திருமணம் நடந்தது

ஜெர்மன் நாட்டு எழுத்தாளரான இவர், கடந்த ஓராண்டுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர்.;

Update: 2019-08-27 22:45 GMT
கோலார் தங்கவயல்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜெஷி ஜீவன். கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் சுவெட்லா ஹன்னா. ஜெர்மன் நாட்டு எழுத்தாளரான இவர், கடந்த ஓராண்டுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சுவெட்லா ஜெர்மனுக்கு திரும்பி சென்றுவிட்டார். ஆனாலும் அவர்கள் சமூக வலைத்தளம் மற்றும் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா சோமேஸ்வரா கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி ஜெஷி ஜீவன்-சுவெட்லா திருமணம் நடைபெற்றது. பட்டுப்புடவை அணிந்திருந்த சுவெட்லா கழுத்தில் ஜெஷி ஜீவன் தாலிக்கட்டினார். நண்பர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் புதுமண தம்பதியை வாழ்த்தினார்கள்.

மேலும் செய்திகள்